Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவியுங்கள்! -அமலாக்கத் துறை கோரிக்கை


வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் வேண்டும் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் கடந்த மார்ச் மாதம் லண்டனுக்குச் சென்றுவிட்டார். அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

ஆனால் அவர், இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, பிரிட்டன் அரசின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது. இந்நிலையில், விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிக்க வேண்டும் என்று பண மோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திடம் அமலாக்கத் துறை நேற்று கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான உத்தரவை நீதிமன்றம், நாளை மறுதினம் (13-ம் தேதி) பிறப்பிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.