Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ள இந்திய வீரர்கள், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 8 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், இந்திய கேப்டன் டோனி சொதப்பி விட்டார். எஞ்சிய இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய அழுத்தம் இளம் வீரர்களை காட்டிலும் அனுபவம் வாய்ந்த டோனிக்கே அதிகமாக இருக்கிறது.

கிரேமி கிரீமர் தலைமையிலான ஜிம்பாப்வே அணி முதலாவது வெற்றியால் புதுதெம்பு அடைந்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் சிகும்புரா 7 சிக்சருடன் 54 ரன்கள் விரட்டி மிரட்டினார். இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், அது ஜிம்பாப்வேக்கு வரலாற்று வெற்றியாக அமையும். ஏனெனில் 20 ஓவர் தொடரில் அந்த அணி 2 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆட்டங்களில் இதற்கு முன்பு வென்றது கிடையாது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.