Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

சளி மருந்து சாப்பிட போறீங்களா..?


சளி பிடித்துவிட்டால் உடனே நமக்குத் தெரிந்த மற்றும் விளம்பரங்களில் பார்க்கும் மருந்துகளை வாங்கி விழுங்கிக்கொள்வோம். குழந்தைகளுக்கும் இதையேதான் செய்கிறோம். சளிக்கு இப்படி நாம் பயன்படுத்தும் பிரபல மருந்துகளில் பி.பி.ஏ. என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது என எச்சரிக்கிறார், பொதுநல மருத்துவர் புகழேந்தி.
என்ன செய்யும் இந்த பி.பி.ஏ?

‘‘பொதுவாக நாம் சளிக்குப் பயன்படுத்தி வரும் பிரபல மருந்துகள், மூக்கு ஒழுகுதலையும், ரத்த ஓட்டத்தையும் குறைக்கும். இதனால், மூக்கடைப்பு, ஜலதோஷம் குறைந்த மாதிரியும், கொஞ்சம் குணம் பெற்றது போலவும் தோன்றினாலும், இதில் கலந்திருக்கும் பி.பி.ஏ (Phenyl Propanol Amide) என்ற வேதிப்பொருள், தூக்கமின்மையை ஏற்படுத்துவதோடு.. பதற்றம், ஹார்மோன் மாற்றங்கள், சீராக இருக்கும் இதயத் துடிப்பை தொந்தரவு செய்வது என பல பக்கவிளைவுகளைத் தரும். இந்த மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தினாலோ, குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் பரிந்துரைக்கப்பட்டதற்கும் அதிகமான தடவைகள் பயன்படுத்தினாலோ பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுதவிர, நோய்வாய்ப்பட்டிருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் இதை எடுத்துக் கொள்ளும்போது, பக்கவிளைவுகளின் தீவிரத்தை அதிகப்படுத்தி அதிகபட்சமாக இறப்பு வரைகூட கொண்டு போகும். அமெரிக்காவில் இந்த வேதிப்பொருள் கலந்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு தடை விதித்திருக்கிறார்கள். பொதுவாக, அந்நாட்டில் மருந்துவாங்கும்போது, அதன் சாதக பாதகங்கள் அனைத்தும் குறிக்கப்பட்ட சீட்டில் வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்குவார்கள். நுகர்வோரின் இந்த உரிமையைக் காப்பாற்றும் கடுமையான சட்டங்களும் அங்கு உண்டு. ஆனால், நம் நாட்டில், மருத்துவரின் ஆலோசனைகூட இன்றி பார்மஸிகளில் மருந்துகள் வாங்கி உட்கொள்ளும் அளவுக்கே நம் ‘அக்கறை’ இருக்கிறது. அடுத்தமுறை சளிக்கு மருத்துவரே மருந்து எழுதினாலும், ‘இதில் பி.பி.ஏ. இருக்கா டாக்டர்?’ என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

மேலும், காய்ச்சல் இல்லாமல் சளி ஏற்பட்டு, பசி உணர்வு, மற்ற செயல்கள் எல்லாம் நார்மலாக இருந்தால், அந்தச் சளிக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை; மருந்துகளும் தேவையில்லை. இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். அதனால்தான், ‘சளிக்கு மாத்திரை சாப்பிட்டா ஏழு நாள், சாப்பிடலைன்னா ஒரு வாரம்’ என்று வேடிக்கை யாகச் சொல்வதுண்டு. ஒருவேளை வைத்தியம் தேவைப்படும் சளி என்றால்... காய்ச்சல், பசியின்மை, சோர்வு என்று உடலே அறிகுறிகள் காட்டும். அப்போது மருத்துவரிடம் சென்றால் போதுமானது!’’

டாக்டர் புகழேந்தி சொன்னதை எல்லாம் குறித்துக்கொண்டீர்கள்தானே!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.