சோழவந்தானில் 6 மாதத் தென்னங்கன்று குழை தள்ளிய வினோதம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் நாடார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (52). இவர் தேங்காய் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார். தனது நிலத்தில் நடுவதற்காக சுமார் 1500 தென்னங்கன்றுகளை பதியம் போட்டு நீர் பாய்ச்சி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பதியம் போட்ட தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் விடும்போது 6 மாத தென்னங்கன்று ஒன்றில் தேங்காய் குழை தள்ளி இருந்தது. இதைப் பார்த்து முருகேசன் வியப்படைந்தார். தேங்காய் குழையில் 9 காய்கள் இருந்தன. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் குழை தள்ளிய வினோத தென்னங்கன்றை அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.