இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம், அரசிடம் உரிய முறையான அனுமதி ஏதும் பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது. இதனை எதிர்த்து கிரிக்கெட் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த 3 கேலரிகளுக்கு சீல் வைத்ததை மாநகராட்சி உடனே அகற்ற வேண்டும் என்று 2012, டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சென்னை மாநகராட்சி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 கேலரிகளையும் இடிக்குமாறு கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அதன் பிறகும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்த 3 கேலரிகளுக்கும் அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த 3 கேலரிகளை இடிக்க சென்னை பெருவளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ), இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.