கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். அதேபோல், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்களின் நலனை காக்க தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் தி.மு.க.
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என கூறியிருந்தனர். அதன்படி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்'' என்றார்.
கடந்த 3-ம் தேதி ''தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், எதிரிக்கட்சியாக செயல்படாது'' என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.