Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

இவர் என்ன பாஸா இல்லை லூஸா?.. வேலை பார்க்காத ஊழியர்களை அடித்து வெளுக்கும் மேனேஜர்!!


சீனாவில் சரியான நேரத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காத ஊழியர்களை அனைத்து ஊழியர்கள் முன்பும் நிற்க வைத்து அடிக்கிறார் ஒரு வங்கி மேனேஜர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில், வேலையை குறித்த நேரத்தில் முடிக்காத ஊழியர்களை மேடையில் வரிசையாக நிறுத்தி அவர்கள் செய்து முடிக்காதது குறித்து கேட்கிறார் அந்த மேனேஜர். பின்னர் அவர்களை சரமாரியாக திட்டுகிறார். அதன் பின்னர் அவர் செய்வதுதான் ஓவர். கையில் வைத்துள்ள ஒரு தடியால் அவர்களின் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கிறார். திட்டியபடி அடிக்கிறார். பெண் ஊழியர்களையும் அவர் விடவில்லை. அவர்களுக்கும் அடி விழுகிறது.

திரும்பத் திரும்ப அவர் அடிப்பதை அத்தனை பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டுள்ளனர். ஆளுக்கு 4 அடி கொடுத்து விட்டுத்தான் நகர்கிறார் அந்த மேனேஜர். ஊழியர்களும் அடி வாங்கியபடி கைகளை முன்னால் கட்டியபடி அமைதியாக நிற்கின்றனர். ஸ்கூலை விட ரொம்ப மோசமா இருக்கும் போலயே இந்த பேங்க்.!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.