பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் பெண்ணை அணுகும் ஆசாமிக்கு, திடீரென இரண்டு கண்களும் திகுதிகுவென எரிந்தால் எப்படி இருக்கும்? பெண்களின் தற்காப்புக்கு உதவியாக தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘மிளகாய் பொடி ஸ்பிரே’ செய்யும் மேஜிக்தான் இந்த கண் எரிச்சலுக்கு காரணம் என்பதை எதிரி அறிந்து கொள்வதற்கு முன், அந்தப் பெண் அங்கிருந்து எளிதில் தப்பித்து சென்றிருப்பார். பெண்களின் தற்காப்புக்காக சந்தையில் ஏற்கனவே ‘மிளகு ஸ்பிரே’ கிடைக்கிறது. ஆனால் இது ரூ.170 தொடங்கி ரூ.400 வரை பல ரகங்களில் கிடைக்கிறது. வசதி படைத்த பெண்களால் மட்டுமே இதனை வாங்க முடிகிறது.
ஏழை மற்றும் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பெண்களால் பணம் கொடுத்து மிளகு ஸ்பிரே வாங்கி கட்டுப்படி ஆகாது. எல்லா பெண்களுக்கும் உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த ‘மிர்ச்சி ஜோங்க்’ எனும் தொண்டு நிறுவனம் வித்தியாசமாக சிந்தித்தது.
அதன் விளைவு, ‘மிர்ச்சி ஸ்பிரே’ தயாராகி உள்ளது.மிர்ச்சி ஸ்பிரே அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு மிர்ச்சி ஜோங்க் நிறுவனர் சீமா மாலிக் பேசுகையில், ‘‘அரை ஸ்பூன் மிளகாய்ப்பொடி கொண்டு பெண்கள் வீட்டிலேயே மிர்ச்சி ஸ்பிரே எளிதில் தயாரிக்கலாம். அதிகபட்சமாக ரூ.25 இருந்தால் போதுமானது. தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு மிர்ச்சி ஸ்பிரே இலவசமாக வழங்கப்படும். கெட்ட எண்ணத்துடன் அணுகும் ஆசாமிகளிடம் இருந்து எந்த ஒரு சூழலில் இருந்தும் பெண்களால் இனி தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்’’, என்றார். டெல்லியிலுள்ள பெண்களுக்கு கராத்தே போன்ற தற்காப்புக் கலை பயிற்சிகளை மிர்ச்சி ஜோங்க் நிறுவனம் இலவசமாக பயிற்றுவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளுக்கும் தற்காப்பு கலை இலவச பயிற்சி நடத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. பிரச்னைகளில் சிக்கியுள்ள பெண்கள், 6060 6161 எனும் தொலைபேசியில் தொண்டு நிறுவனத்தின் உதவியை எந்த நேரத்திலும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிளகாய்ப்பொடி ஸ்பிரே தயாரிப்பது எப்படி?
மிளகாய்ப்பொடி ஸ்பிரே தயாரிப்பது ஒன்றும் பிரம்ம வித்தை அல்ல. மிகவும் எளிதானது. அரை ஸ்பூன் மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து, பின்னர் சுத்தமான துணியில் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரை பாட்டிலில் அடைத்து ஸ்பிரே மூடியால் மூடினால் மிர்ச்சி ஸ்பிரே ரெடி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.