7 - வது ஊதியக்குழு உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். இதனால் ஊழியர்களின் சம்பளத் தொகை 23.55 சதவிகிதம் உயரும். அடிப்படை சம்பளம் 14.27 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டுமென ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் பென்ஷன் பெறுபவர்களும் பயன் அடைவார்கள். இந்த ஊதிய உயர்வு 2016 ஜனவரி 1ம் தேதியிலிருந்து கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வினால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்துக்கு ரூ. 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதில் சம்பள உயர்வு ரூ.39,100 கோடியும், இதர படிகள் ரூ. 29,300 கோடியும், பென்ஷன் வாங்குபவர்களுக்கு ரூ.33,700 கோடியும் செலவாகும்.
இதனால் அதிகபட்ச ஊதியமாக ரூ. 2,25,000 லிருந்து ரூ.2,50,000 ஆக உயரும். மேலும் அமைச்சரவை செயலாளர்கள், சட்ட வல்லுநர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.90 ஆயிரம் வரை சம்பளம் உயரும்.

தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.7000 ஐ இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதாவது குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் ஆகும். இதோடு ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு சதவிகிதத்தையும் 2.5 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் அரசு ஊழியர்கள் கூடுதலாக வருவாய் கிடைக்கும்போது அதை ரியல் எஸ்டேட்டில்தான் முதலீடு செய்வார்கள். அதன்படி தற்போது பல ஆண்டுகளாக சரிவில் இருக்கும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுவாக மத்திய அரசின் ஊதியக்குழு பரிந்துரை ஒப்புதல் பெறப்பட்டால் அடுத்த சில மாதங்களில் மாநில அரசும் தங்களது ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும் என்பதால் 7 வது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் மாநில அரசு ஊழியர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.