Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்ரின் சைமன்! -ஜெயலலிதா உருக்கம்


என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்ரின் சைமன் என்று தனது இரங்கல் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''சென்னை சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்ட்டின் எனது ஆசிரியை கேத்ரின் சைமன் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கல்வி கற்பிக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.

சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்டில் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை அவரது மாணவியாக நான் இருந்தது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியை கேத்ரின் சைமன். ஆசிரியை, மாணவி என்ற முறையில் எனக்கும் அவருக்கும் விசேஷமான நல்லுறவை பரிமாறிக் கொண்டோம்.

சர்ச் பார்க் பிரசன்டேசன் கான்வென்டில் அவருடன் தொடர்புடைய மாணவிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். அவரது கருணையும், உறுதியான நிலைப்பாடும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.