பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்துக படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாக நடக்கிறது. இதில் பல உயிரிழப்புகள் தொடர்ந்தாலும் மாணவகள் தங்களை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை. படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்விதுறை அதிரடி நட்வடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி இனி பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் மாணவர்களின் பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் அந்த மாணவர்களின் பேருந்து பயண அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.