Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

நீச்குசல் குளத்தில் Burqini ஆடை அணிந்து குளித்த இஸ்லாமிய பெண்கள்: தடை விதித்த மேயர்..!!



ஜேர்மனில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும்போது Burqini ஆடையினை அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
Neutraubling என்ற இடத்தில் உள்ள குளத்தில் பெண்கள் மட்டும் குளிப்பதற்கு ஏதுவாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இங்கு வரும் இஸ்லாமிய பெண்கள், Burqini ஆடையினை அணிந்து குளிக்கின்றனர், இந்த ஆடை நீச்சல் ஆடை போன்று இருக்காமல் உடல் முழுவதும் மூடப்பட்டபடி, சற்று மொடனாக இருக்கும்.
மற்ற பெண்கள் நீச்சல்ஆடையில் குளிக்கையில், இஸ்லாம் பெண்கள் மட்டும் Burqini ஆடை அணிந்து குளித்துள்ளது சக பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, பிற பெண்கள் நகராட்சியை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர், இதுகுறித்து Christian Social Union (CSU) கட்சியின் மேயர் Heinz Kiechle கூறியதாவது, இந்த குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது, இதில், இஸ்லாம், கிறிஸ்த்துவர்கள் என எவ்வித பாகுபாடும் காட்ட இயலாது.
இந்த குளத்திற்கு வருபவர்கள், இங்கு விதிக்கப்படும் சட்டதிட்டங்களை பின்பற்றி நடந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும், எனவே இதுபோன்ற ஆடையை இனி பயன்படுத்தகூடாது என தடைவிதித்துள்ளார்.
தற்போது இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.