Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

தே.மு.தி.க., த.மா.கா.வோடு இருந்தது தொகுதி உடன்பாடு மட்டும்தான்! -முத்தரசன்


கோவை: உள்ளாட்சி தேர்தலிலும் 6 கட்சி கூட்டணி தொடரும் என தெரிவித்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., த.மா.கா.வோடு வைத்திருந்தது தொகுதி உடன்பாடு மட்டும் தான் என தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின், உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. தலைமையில் 6 கட்சி கூட்டணி தொடரும் என மக்கள் நலக்கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்பட்ட  இருந்து தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் வெளியேறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட 6 கட்சிகள் அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது. 6 கட்சிகளும் இணைந்தே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை அடுத்து, கோவையில் முத்தரசனை சந்தித்தோம்.



இது தொடர்பாக முத்தரசன் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டியக்கம் 2015 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டு , நவம்பரில் மக்கள் நலக்கூட்டணியாக மாறியது. மக்கள் நலக்கூட்டணியோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் தொகுதி உடன்பாடு செய்திருந்தது. சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து என்ன நிலை என்பது குறித்து அந்தந்த கட்சிகள் முடிவு செய்வதற்கு அவர்களுக்கு தான் உரிமை உண்டு.

அதன் அடிப்படையில், தே.மு.தி.க., த.மா.கா. அவர்கள் கட்சி நலனுக்காக முடிவை எடுத்திருப்பார்கள். மக்கள் நலக்கூட்டணியை பொறுத்தவரை தொடர்ந்து செயல்படும். நாங்கள் 4 கட்சியினரும் தொடர்ந்து செயல்படுவோம். ம.தி.மு.க. சார்பில் 24 ஆம் தேதி நடத்தப்படும் இஃப்தார் விருந்துக்கு யாரை அழைத்தார் என்பது எனக்கு தெரியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்தார், வருகிறோம் என சொல்லி இருக்கிறோம்.

மக்களின் எதிர்பார்ப்பு என்பது, பூரண மதுவிலக்கு என்பது தான். தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள். அது வருமானம் குறைந்த கடைகளாக இருக்கலாம். ஆனால் அது பிரச்னையல்ல. படிப்படியாக மதுவிலக்கு என்கிறார்கள், அப்படி என்றால் அதற்கு கால வரம்பு வேண்டும். இத்தனை மாதங்களில் மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும் என்பதை தெரிவிக்க் வேண்டும்.

தற்போதையை சட்டமன்ற கூட்ட முதல்வர் உரையில், இத்தனை மாதத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.