Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

அறுவை சிகிச்சையின் போது கோமா நிலைக்கு திரும்பிய சிறுவன்: மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு


ஜூன் 10ம் தேதியன்று பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையின் போது ஐந்து வயது சிறுவன் ஒருவன் கோமா நிலைக்கு திரும்பினான். இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை மீது குற்றம் சாட்டியுள்ளனர். என் மகனின் விரல்கள் காயப்படுத்தப்பட்டது என்று பள்ளியில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பள்ளி அதிகாரிகள் என்னை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர் என்று சிறுவனின் தந்தை புருஷோத்தம்மன் கூறினார். நான் மருத்துவமனை சென்று பார்த்தபோது, எனது மகனின் இரண்டு விரல்கள் சேதமடைந்திருப்பதை பார்த்தேன். மருத்துவமனை அதிகாரிகள் அறுவை சிகிச்சை செய்ய ரூ.60,000 பணத்தை செலுத்த வேண்டும் என்றும், ஆறு மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் என்னிடம் கூறினர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு, என மகன் நலமாக உள்ளான். சில மணி நேரம் கழித்து, அவனுக்கு இதய பிரச்சனைகள் உள்ளது என மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் என் மகன் கோமா நிலையில் உள்ளான். என் மகனை பற்றி இன்னும் எந்த தகவலும் மருத்துவமனையில் இருந்து அளிக்கவில்லை என்று புருஷோத்தம்மன் புகார் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.