Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

அல்பினோ சமூகத்தை பாதுகாக்க மலாவி அரசு தவறியுள்ளது: சர்வதேச மன்னிப்பு சபை -


 
அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை கொண்ட சமூகத்தினரை பாதுகாக்க மலாவி அரசாங்கம் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
அல்பினிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த ஈராண்டு காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த தாக்குதல்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அல்பினிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 69 பேர் கடந்த 2014ஆம் தாக்கப்பட்டுள்ளதாக மலாவி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2014ஆம் ஆண்டு நவம்பர் முதல் சுமார் ஐவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மேலும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் வரை சுமார் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.