Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

உடல் சோர்வை போக்கும் ஆரஞ்சு


கோடைகாலத்தில் அதிகளவு வெப்பத்தால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். நாவறட்சி, சிறுநீர் தாரையில் எரிச்சல், தோலில் ஏற்படும் எரிச்சல், கொப்பளங்கள், வெடிப்பு, கட்டிகள் போன்ற பாதிப்பு ஏற்படும். இப்பிரச்னைகளை சரிசெய்து, உடலுக்கு புத்துணர்வு தரக்கூடியபானங்கள் தயாரிக்கலாம்.

கொத்தமல்லி இலையை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி, எலுமிச்சை, தேன். கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து கொள்ளவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்க்கவும். தினமும் ஒரு தடவை குடித்துவர உடல் புத்துணர்வாக இருக்கும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

அதிக உஷ்ணத்தால் தோல் வறட்சி, கண்களில் எரிச்சல், அதிக தாகம், வியர்வை, துர்நாற்றம், வியர்குரு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கொத்தமல்லி மருந்தாகிறது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரோக்கியம் தரவல்லது.ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி உடல் அசதிக்கான பானம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: ஆரஞ்சு பழம், சீரகப்பொடி, தேன். ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது நீர்விடவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகப்பொடி, தேன் சேர்த்து குடித்துவர உடல் அசதி போகும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது. கல்லீரலை பலப்படுத்தும். ஆரஞ்சில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. நன்மைகளை கொண்ட ஆரஞ்சு, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. உஷ்ணத்தை குறைக்கிறது. உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

பருப்பு கீரையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, சீரகப்பொடி, உப்பு. பருப்பு கீரையை நீர்விட்டு சுத்தம் செய்து எடுக்கவும். இதனுடன் சீரக பொடி, சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாரம் இருமுறை இதை குடித்துவர கோடைகால நோய்களை தடுக்கலாம். வியர்குரு, அம்மை, அக்கி வராமல் பாதுகாக்கலாம்.

கோழி கீரை என்று பருப்பு கீரையை கூறுவதுண்டு. பறவைகள் விரும்பி சாப்பிடும் இந்த கீரை, அதிக சத்துக்களை உள்ளடக்கியது. குழந்தைகளின் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதம் பருப்பு, குங்குமப்பூ, பால், தேன். குளிர்ந்த பாலில் ஓரிரு குங்குமப்பூ, பாதாம் பொடி சேர்க்கவும். இதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களது உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும். பாதாம் பல்வேறு நன்மைகளை கொண்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.