நாகர்கோவில் காதலை ஏற்காததால் பள்ளி ஆசிரியை, பஸ் டிரைவர் அரிவாலால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
நாகர்கோவில் வெள்ள மடத்தை அடுத்த ஆண்டார் குளத்தைச் சேர்ந்த செல்வகுமாரி(24), தேரூர் அருகே குறண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
அதற்கு முன்பு அவர் செண்பகராமன்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் பட்டப்படிப்பு படித்தார். அப்போது ராதாபுரத்தை அடுத்த வேப்பிலாங்குளத்தைச் சேர்ந்த சுடலைக்கண்(27) என்பவர் அந்த கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்தார்.
அப்போது செல்வகுமாரியை சுடலைக் கண் ஒருதலையாக காதலித்து வந்தார். சுடலைக்கண் அவ்வப்போது செல்வகுமாரியை சந்தித்து தனது காதலை ஏற்கும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.
நேற்று காலை செல்வகுமாரி வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டபோது வழியில் அவரை சுடலைக்கண்ணு பேச முயற்சித்தபோது, செல்வகுமாரி அவரிடம் பேசாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுடலைக்கண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வகுமாரியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். அவர் சற்று விலகியதால் வெட்டு செல்வகுமாரியின் தோளில் விழுந்தது.
இதனால் அலறி அடித்தபடி செல்வகுமாரி அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஓடினார். அவரை துரத்திச் சென்ற சுடலைக்கண்ணை அக்கம்பக்கத்தினர் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.