இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்று காலை முதல் தொடங்கியது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்று காலை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று அதிகாலை முதல் தொடங்குவதாக தமிழக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று காலை முதலே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் இன்று முதல் ஒரு மாதம் வரை நோன்பு இருப்பார்கள். இவ்வாறு ஒருமாத கால நோன்பு முடிந்ததும் மீண்டும் ஷவ்வால் மாத பிறையை பார்த்து ஈகை திருநாள் எனும் ரமலான் பெருநாளை கொண்டாடுவார்கள்.
ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய நாள் காட்டியின்படி ஒன்பதாவது மாதம் ரமலான் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரிய உதயமாவதிலிருந்து, சூரியன் அஸ்தமிக்கும் வரை இஸ்லாமியர்கள் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் நோன்பு இருப்பர்.
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் புகை பிடித்தல், மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். மேலும் இந்த மாதத்தில் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் ஏழைகளுக்கு உதவுவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.