June 30, 2016
இளம்பெண் சுவாதியை கொலை செய்த இளைஞரின் தெளிவான புகைப்படம் வெளியீடு!
நுங்கம்பாக்கத்தில் மென் பொறியாளர் சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் வாலிபரின் தெளிவான புதிய புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தொடரந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் இளைஞரின் தெளிவான புதிய புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த சிலரின் உதவியுடன் அந்த வாலிபரின் படத்தை மேம்படுத்தி காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை ஹைதராபாத் தேசிய தடயவியல் நிலைத்திற்கு அனுப்பி வைக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தெளிவான, மேம்படுத்தப்பட்ட புகைப்படம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இப்புகைப்படத்திலும் குற்றவாளியின் தெளிவான முகம் பதிவாகவில்லை. முன்னதாக, ரயில் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் இருந்த போதும் குற்றவாளியை யாரும் படம் பிடிக்காதது குறித்த தனது ஆதங்கத்தை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வெளியிட்டிருந்தார்.
இளம்பெண் சுவாதியை கொலை செய்த இளைஞரின் தெளிவான புகைப்படம் வெளியீடு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.