Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

மனைவி மாற்று முறையில் உறவு: பிரபல தொழில் அதிபரின் மருமகள் பரபர புகார்


புவனேஸ்வர்: ஒடிஷாவின் முன்னணி தொழில் அதிபர் ஒருவரின் மருமகள் தனது கணவர் தேனிலவின்போது தன்னை கட்டாயப்படுத்தி மனைவி மாற்று முறையில் ஈடுபட வைத்ததாக புகார் தெரிவித்துள்ளார். ஒடிஷா மாநிலத்தின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் டிரைலோக்யா மிஸ்ரா. அவரின் மகன் சப்யசாச்சி மிஸ்ராவின் மனைவி லோபமுத்ரா(36). லோபமுத்ரா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணமான நாளில் இருந்து அவர்கள் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக தனது புகார் மனுவில் லோபமுத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமணமானதில் இருந்து என்னை என் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆஷா ஆகியோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அதை எதிர்த்தால் இது எல்லாம் பெரிய குடும்பங்களில் சகஜம், பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். 2006ம் ஆண்டு தேனிலவுக்கு போர்ட் பிளேர் சென்றபோது என் கணவர் என்னை கட்டாயப்படுத்தி வெளிநாட்டவருடன் உறவு கொள்ள வைத்தார். வெளிநாட்டவருடன் நானும், அவரின் மனைவியுடன் என் கணவரும் இருக்க அவர் கட்டாயப்படுத்தினார். திருமணமாவதற்கு முன்பு என் கணவர் பல பெண்களுடன் உறவு கொண்டுள்ளார். கள்ளத்தொடர்பு காரணமாக ஒருமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார். அவர் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் அவரை மணந்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார். எதிர்த்து கேட்டால் என்னை அடிப்பார். முன்பும் கூட என் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர் திருந்திவிடுவதாக கூறியதை அடுத்து அந்த வழக்கை வாபஸ் பெற்றேன் என்றார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.