Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

கருப்பு பண விவகாரத்தில் மோடி அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை: - பாபா ராம்தேவ்



பா.ஜ.க. ஆதரவாளரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் சண்டிகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்காதது என்னையும், நாட்டு மக்களையும் அதிருப்தி அடையவைத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோருடன் பேசியுள்ளேன்.மோடி அரசில் ரெயில்வேத்துறை மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரி ஆகியோரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மோடி அரசு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்றார்.

 
மேலும், ‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டால், கடுமையாக வேலை செய்ய வேண்டியது இல்லை என்பதால் பா.ஜ.க. தொண்டர்கள் சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள். ஆனால், பிரியங்கா தலைவராக வந்தால் பா.ஜ.க. தொண்டர்கள் யோகா செய்ய வேண்டி வரும்’’ என்று நகைச்சுவையாக தெரிவித்தார் ராம்தேவ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.