Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

‘டியர்’ என கூறுவதா? பொங்கியெழுந்த மந்திரி ஸ்மிரிதி இரானி



பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கூட்டணி அரசில், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி கல்வி மந்திரியாக உள்ளார். 

இவர் பெண் மந்திரியான மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் ‘கல்வி கொள்கை என்னவாயிற்று?’ என்பது தொடர்பாக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார். 

அதில் அவர் ‘அன்பார்ந்த’ என்ற அர்த்தம் தொனிக்கும்வகையில் ‘டியர் ஸ்மிரிதி இரானிஜி’ என தொடங்கி இருந்தார்.

இதற்கு ஸ்மிரிதி இரானி கடும் ஆட்சேபம் தெரிவித்து அதே டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். அதில் அவர் ‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல’ என சுட்டிக்காட்டி இருந்தார். 



உடனே அசோக் சவுத்ரி, “எனது நோக்கம் அவமரியாதை செய்வதல்ல. பணி ரீதியிலான இமெயில் என்பதால் அப்படி தொடங்கி இருந்தேன்” என பதில் வெளியிட்டார்.

அதற்கு ஸ்மிரிதி இரானி, “அசோக் சவுத்ரி, உங்களுக்கும் சரி, வேறு எந்தவொரு நபருக்கும் சரி எனது தகவல்தொடர்புகள் அதார்னியா (மரியாதைக்குரிய) என்றுதான் தொடங்கும்” என பதில் அளித்திருந்தார்.

‘டியர்’ என்ற வார்த்தையை பீகார் கல்வி மந்திரி பயன்படுத்தியதற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி எதிர்ப்பு தெரிவித்து, இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.