June 13, 2016
கருப்பு பணம் பெறுவதை ஒப்புக்கொண்ட ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ
ஆளும் பா.ஜ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் இடப்படும் என்று வாக்குறுதிகளை அளித்திருந்தது நம் நினைவில் இருக்கும்.
தற்பொழுது ராஜஸ்தானின் பா.ஜ.க எம்.எல்.ஏ. கியான் தேவ் அஹுஜா தான் கருப்பு பணத்தை பெறுவதாகவும் ஆனால் அதனை தனக்காக செலவு செய்யாமல் பசுக்களை பாதுகாப்பதற்காகவும் கோவில்களுக்கு, மற்றும் பெண்களின் திருமணத்திற்காக செலவு செய்துவருவதாக கூறியுள்ளார்.
மேலும் கருப்பு பணம் குறித்த தனது யுக்தியானது அதனை பசுக்களின் பாதுகாப்பிற்கும், கோவில்களுக்கு கொடுப்பதும் ஆகுமென்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என்னிடம் பிறர் பணம் தரும் போது நான் அதனை எனக்காக பயன்படுத்துவதில்லை. சிலர் கட்சிக்கு பணம் தரலாமா ஏன்று கேட்கின்றனர். நான் கட்சியிடம் அதிக பணம் இருக்கின்றது என்று கூறிவிடுவேன்” என்று கூறியுள்ளார். இன்னும் “நான் யாரிடம் இருந்து எல்லாம் பணம் பெறுகிறேனோ அவர்களுக்கு எல்லாம் அந்த பணத்திற்கான ரசீதையும் வழங்கிவிடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“ட்டவிரோதமான கருப்பு பணத்திற்கு ஏன் ரசீது என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். கருப்பு பணமாக இருந்தாலும் நல்லவழியில் செலவு செய்வதால் எந்த தவறும் இல்லை” என்று கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இருந்தாக கூறப்பட்ட ஆணுறைகளின் எண்ணிக்கையை சரியாக எண்ணிப்பார்த்து கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பணம் பெறுவதை ஒப்புக்கொண்ட ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.