ஜப்பானில் குறும்பு செய்ததற்காக பெற்றோரால் அடர்ந்த காட்டில் தனித்துவிடப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவாரத்துக்குப் பிறகு ராணுவத்தால் மீட்கப்பட்டார்.
ஜப்பானின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யமாட்டோ டநாகா என்ற 7 வயது சிறுவன், அதிக அளவில் குறும்பு செய்வதாகக் கூறி அவனது பெற்றோர் அடர்ந்த காட்டில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டனர். சிறிது நேரத்தில் டநாகாவைக் கண்டுபிடித்துவிடலாம் என்று பெற்றோர்கள் எண்ணியது நடக்கவில்லை.
இதனால், போலீசில் பெற்றோர் புகார் அளிக்க, ராணுவத்தின் உதவியுடன் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு மேலாகத் தேடிவந்தனர். இந்தநிலையில், அந்தக் காட்டுப்பகுதியில் உள்ள ராணுவ மையத்துக்கு அருகில் அந்த சிறுவனை ட்தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர் கண்டுபித்தனர்.
கடும் குளிரும், கன மழையும் பொழியும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் 7 நாட்களுக்கு மேலாக சிறுவன் தாக்குப்பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.