June 16, 2016
பிராமணர்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலித் தலைவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி அதிரடி!
பிராமணர்களுக்கு எதிரான கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலித் தலைவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக களமிறங்கியுள்ளன. பாஜகவில் யாரை முதல்வர் வேட்பாளராக்குவது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் அனைத்து உயர்ஜாதியினர் வாக்குகளையும் பெறுவதற்கான முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டுவருகிறது.
ஆளும் சமாஜ்வாடி கட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளைத் தக்க வைக்க வியூகம் வகுத்து செயல்படுகிறது. பகுஜன் சமாஜ்கட்சியோ தலித்துகளுடன் உயர்ஜாதியினர் வாக்குகளையும் தம் பக்கம் திருப்புவதில் முனைப்பு காட்டுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு இப்படியான ஒரு வியூகம் வகுத்து அதில் வெற்றியும் பெற்றது பகுஜன் சமாஜ்கட்சி. தற்போதைய தேர்தலிலும் இதே பார்முலாவை கடைபிடிக்க விரும்புகிறார்அக்கட்சித் தலைவர் மாயாவதி. இதை வெளிப்படுத்தும் விதமாக பிராமணர்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சஞ்சய் பார்தியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் மாயாவதி. ஆனால் சஞ்சய் பார்தியோ, தம்முடைய ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு யாரோ அப்படியான பதிவுகளைப் போட்டுள்ளனர்; விரைவில் மாயாவதி உண்மையை உணர்ந்து கொள்வார் என கூறியுள்ளார். இப்போதும் கை கொடுக்குமா மாயாவதியின் பழைய வியூகம்?
பிராமணர்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தலித் தலைவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி அதிரடி!
Reviewed by மறத்தமிழன்
on
June 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.