பாகிஸ்தானில் அரசாங்க கட்டடங்கள் மற்றும் நகரம் முழுவதிலும் உள்ள வணிக மையங்களில் சுமார் இரண்டாயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன..
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சுமார் இரண்டாயிரம் உயர் தொழில்நுட்ப கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அரசாங்க கட்டிடங்கள் மற்றும் நகரம் முழுவதிலும் உள்ள வணிக மையங்களில் நிறுவப்பட்டுள்ளது.
முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் உள்ளிட்ட நவீன வசதிகள் அந்தக் கேமராக்களில் உள்ளன.
அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் புதிதாகக் கட்டப்பட்ட மையம், வெடிகுண்டுத் தாக்குதல்களையும் தாங்கும் திறன் கொண்டது.
இந்தத் திட்டத்திற்கான ஒரு பகுதி நிதி ‘வுவேய்’ என்ற சீன நிறுவனத்தால் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதால் இந்த திட்டம் நிறைவுபெற ஏழு ஆண்டுகள் ஆனது.
இந்நிகழ்விற்கான தொடக்க விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் நிசர் அலி கான், ஒரு திட்டம் வராமல் போவதை விட தாமதமாக வருவது மேல் என்று தெரிவித்துள்ளார்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.