விமான பயணிகள் துபாயைச் சுற்றிப் பார்க்க பல்வேறு சலுகைத் திட்டங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதற் காக மை எமிரேட்ஸ் பாஸ் எனும் சிறப்பு அட்டையை தனது பயணி களுக்கு இந்நிறுவனம் வழங்கு கிறது.
இந்த சலுகை வசதி ஆகஸ்ட் 31ம் தேதி வரை இருக்கும். எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பவர்கள் துபாயின் சுற்றுலா பகுதிகளை பல்வேறு சலுகைகளுடன் சுற்றிப் பார்க்கலாம். இந்த பாஸ் மூலம் 65 பிரபல உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பாலைவன சஃபாரி, கோல்ஃப் விளையாட்டு, ஹெலி காப்டர் சுற்றுலா உள்ளிட்ட இடங் களில் தள்ளுபடி சலுகைகளைப் பெறலாம். துபாய் பொருளாதார மேம்பாட்டுத் துறையும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸும் இணைந்து இத்தகைய சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளன


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.