Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

பேஸ்புக் மூலம் ஆபாச தகவல்கள் - முன்னாள் கணவர் கைது



கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து, அவரது நண்பர்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியதாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்தவர் சச்சின் ஜிண்டால். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இவரது மனைவி குர்கானில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து, நண்பர்களுக்கு ஆபாசமான பதிவுகள் அனுப்பப்பட்டு இருப்பதாக அப்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி தனது பேஸ்புக் கணக்கின் பாஸ்வேர்ட்டை மாற்றிவிட்டதாகவும் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது முன்னாள் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சைபர் க்ரைம் உதவியுடன் இச்சம்பவத்திற்கு காரணம் சச்சின் ஜிண்டால் என்று கண்டறிந்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு எண் 66Aன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.