June 7, 2016
திருநங்கையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்
திருநங்கையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த திருநங்கை யுகா என்பவர், வயிற்று பிழைப்பாக நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் பகுதியில் கடைகளில் வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவரிடம் இளைஞர்கள் சிலர் தவறாக நடக்க முயற்சித்தாகவும், அதனை தட்டி கேட்டப்போது, யுகாவை தென்னை மட்டையால், இளைஞர்கள் ஓட ஓட விரட்டி தாக்கியதில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதனையடுத்து யுகாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான திருநங்கைகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்
திருநங்கையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.