ரிசர்வ் வங்கி கவர்னராக கடந்த 2013 ம் ஆண்டு பொறுப்பேற்ற ரகுராம் ராஜனின் பதவிக் காலம், வரும் செப்டம்பர் 4 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் தனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டாம், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கே திரும்புகிறேன் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியில் கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதார நிலைமை சுமுகமாக இல்லை. பணவீக்கம் அதிகமாக இருந்தது. ரூபாயின் மதிப்பில் தினமும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது. இவற்றைச் சமாளிப்பதற்காக, ரகுராம் ராஜன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன் பின்னரே, நாட்டின் பொருளாதார நிலை சற்று சீரானது.
இதற்கிடையே கடந்த 2013 ம் ஆண்டு செப்டபர் மாதத்திற்கு பிறகு சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் எவ்வளவு சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறித்து Bloomberg நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அதில்
சர்வதேச சந்தைகள் வளர்ச்சி விகிதம்
இந்தியா (Sensex) 26,625.91 43.40%
சீனா (Shcomp) 2885.11 35.60%
யூஎஸ் (Nasdaq) 4800.34 31.55%
ஜெர்மனி (DAX) 9631.36 17.51%
ஜப்பான் (Nikkei) 15599.66 11.00%
கொரியா (Kospi) 1953.40 1.05%
பிரேசில் (BOV) 49533.84 -4.22%
யூகே (FTSE) 6021.09 -7.01%
சிங்கப்பூர் 2763.42 -8.36%
ஹாங்காங் (HSI) 20169.98 -9.66%
ரஷ்யா (RTSI) 910.28 -29.90%
source: Bloomberg
இதில் குறிப்பாக மும்பை பங்குச்சந்தை எண் குறியீடான சென்செக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 43.40 சதவிகிதம் உயர்ந்து 26,625.91 புள்ளிகள் அதிகரித்துள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.