மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு, மாற்று அணி தேவை என்பதை உணர்ந்து, மக்கள் நலக் கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டோம். அதனால்தான், தேமுதிக., - மநகூ., - தமாகா., என கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டது.
கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு கட்சி சார்பாகவும், தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. எனவே, கூட்டணி தொடருமா, தொடராதா என்ற கேள்வி அவசியமில்லை.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, பல இடங்களில், தனிப்பட்ட முறையில் வெற்றி பெறும் அளவுக்கு தமாகா வலுவாக உள்ளது. எனவே, வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளில், தனித்துப் போட்டியிட்டு, வெற்றி பெற முடிவு செய்துள்ளோம்.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி. அவரது வயது, அனுபவம், உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவையில் அவருக்கு தனி இருக்கை வசதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜிகே வாசன் தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.