Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

ஒரு குடம் தண்ணி ஊத்தி”...,



ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்ததாம்..,
ரெண்டு குடம் தணி ஊத்தி
ரெண்டே பூ பூத்ததாம்ன்னு

பாடிக்கிட்டே வரனும். அப்பிடி வரும்போது பத்தாவதா வர்ற பிள்ளையை கோர்த்திருக்கிர கையினால பிடிச்சுக்குவாங்க..., அப்பிடி பிடிச்சுக்கிட்டவங்க கிட்ட இருந்து தப்பி வந்தா மீண்டும் சுத்தி வரலாம்.., இல்லாட்டி அவுட்ன்னு சொல்ல்லி வெளிய அனுப்பிடுவாங்க.

எத்தனை பேரு விளையாட வந்தாங்களோ! அத்தனை பேரையும் பிடிச்சாதான் ஆட்டம் முடிஞ்சுதா கணக்கு.. ஆனா இந்த விளையாட்டு கடைசி வரை முடிச்சுட்டு போனதா, நான் விளையாடுன வரை  எனக்கு நினைவில்லை..  குழந்தைகளுக்கு பசிக்கும், தூக்கம் வரும்.., அப்பா அம்மா கூப்பிடுவாங்க..., இல்லாட்டி கைக்குள்ள மாட்டிக்கிட்ட புள்ள திமிரி தப்பிச்சுக்கும். இப்படி இந்த விளையாட்டு தொடர்ந்துக்கிட்டே போகும்...,

இந்த விளயாட்டுனால ஏகப்பட்ட சந்தோஷமும்.., தோட்டத்து செடிகளுக்கு பூக்குறா நேரத்துல தண்ணி ஊத்தனும்ங்குற மெசேஜும் அழகா வருது பாருங்க சுஜ்ஜி.., விளையாட்டுல கூட ஒரு மெசேஜை சொல்லியிருக்குற நம்ம பெரியவங்களை என்னன்னு சொல்லி பாராட்டுறது?

ரொம்ப கரெக்ட்தான் சார். இனி என் பையனை விளையாட அனுப்புறேன்.

குட்.., இனி உன் பையனோட உடம்பு இளாஇக்கும்.., அடிக்கடி உடம்பு சரியில்லாம போறது இனி நடக்காது பாரேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.