June 11, 2016
பா.ஜ.க பிரமுகர் தூக்கிலிடப்பட்டார்.
சத்திஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரை மாவோயிஸ்ட்கள் கொலை செய்து தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் பீஜபூர் மாவட்டத்தில் உள்ள சங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராம்சாய் மஜ்ஜி. 64 வயதான இவர் பீஜபூர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தார். அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரான இவரது உடல், வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், வெள்ளியன்று இரவு 8:30 மணியளவில் ராம்சாய் மஜ்ஜி வீட்டிற்கு குழுவாக வந்த மாவோயிஸ்ட்கள் அவரை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்சாயை அழைத்துச் சென்ற மாவோயிஸ்ட்கள் அவரை கொன்று தூக்கிலிட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், கொலையாளிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க பிரமுகர் தூக்கிலிடப்பட்டார்.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.