Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

மோடியின் மாயாஜால பேச்சுக்கு பின்னே இருப்பது டெலிபிராம்ப்ட்! – அம்பலமான உண்மை


அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு 66 முறை அமர்ந்தும் 8 முறை எழுந்து நின்றும் அமெரிக்க எம்.பிக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர் என இந்திய ஊடகங்கள் மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரை குறித்து புகழ்ந்து எழுதிவருகின்றன.
இந்நிலை மோடி ஆற்றிய நாடாளுமன்ற உரை அவருடைய உள்ளத்திலிருந்து தோன்றியது அல்ல, எதிரே இருக்கும் திரையில் ஓடியது என ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றும் போது எதிரே வைக்கப்பட்டிருந்த நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய எழுத்துத் திரை(டெலிபிராம்ப்ட்)யைப் பார்த்தே படித்திருக்கிறார். இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட படங்களிலேயே மோடி முன்பு பிராம்ப்ட் இருப்பது பதிவாகியுள்ளது.
நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய இந்த பிராம்ப்ட் வெளியிலிருந்து பார்க்கும்போது கண்ணாடி போலத் தெரியும். எதிரில் இருப்பவர்களுக்கு மட்டுமே திரையில் எழுத்துக்கள் தெரியும். படிப்பவரின் உச்சரிக்கும் தன்மைக் கேற்ப இந்த பிராம்ப்ட்  யாரோ ஒருவர் இயக்குவார். இப்படியான எழுத்துக்களுடன் கூடிய திரையை, 2014 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டபோது இந்திய விண்வெளிக்கழகத்தில் ஆங்கில உரையாற்றியபோது முதன்முதலாக மோடி பயன்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்போதிலிருந்து ஆங்கிலத்தில் உரையாற்றும்போது மோடி இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் செய்திகள் சொல்கின்றன.
lcd obama presidential speech tele prompt amazon
அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகைய டெலி பிராம்ப்ட்களைப் பயன்படுத்தி ‘புகழ்’பெற்ற உரைகளை ஆற்றியதால் அமேசான் நிறுவனம்  ‘ஒபாமா பிரசிடென்ஷியல் ஸ்பீச் டெலிபிராம்ப்டர்’ என்ற பெயரில் இதை விற்றுக்கொண்டிருக்கிறது.
எப்படியோ, நாடகத்தனமான மோடியின் உடல்மொழிகளுக்குக் கைக் கொடுக்கும் சாதனமாக டெலிபிராம்ப்ட் இருக்கிறது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்தும் நபராகவும் மோடி இருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.