Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரசு வேலைகளில் சேர விதித்திருந்த தடை நீக்கம்



ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தவர்கள் அரசு வேலைகளில் சேர அனுமதி மறுத்து 1966 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மோடி அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த உத்தரவின்படி அரசு பணிகளில் சேருபவர்கள் தாங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ அல்லது ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பிலோ இல்லை என்று எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். தற்பொழுது கோவாவில் மத்திய அரசுத் துறை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தவர்களிடத்தில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை என்று உறுதிமொழி பெறப்பட்டதை தொடர்ந்து மோடி அரசினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பணியாளர் மற்றும் பிரதமர் அலுவலக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் பத்திரிகையாளர்களிடம், “மத்திய அரசு சமீபத்தில் அப்படி எந்த ஒரு கட்டளையையும் விதிக்கவில்லை” என்றும் “அப்படி ஏதேனும் பழைய உத்தரவுகள் நடைமுறையில் இருக்குமானால் உள்துறை அமைச்சகத்திடம் கலந்தாலோசித்து அது மறுபரிசீலனை செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
1966 ஆண்டு விதிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி யாரேனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ அல்லது ஜமாத்தே இஸ்லாமி அமைப்பிலோ உறுப்பினர்களாக இருந்தால் அவர்களுக்கு மத்திய அரசின் பணிகள் வழங்கப்பட மாட்டாது. இந்த தடை உத்தரவு 1966 க்கு பின்னர் 1975 திலும் 1980 திலும் மீண்டும் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கையாக விடப்பட்டது.
இந்த உத்தரவு இதுவரை சரியாக பின்பற்றப்படவில்லை என்றாலும் தற்பொழுது பா.ஜ.க ஆளும் கோவாவில் மீண்டும் இந்த உறுதி மொழியை கேட்டதை ஒட்டி இந்த தடை நினைவிற்கு வந்துள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் இன்றைய மத்திய அமைச்சர்கள் பலர் தாங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் என்று பெருமிதப்பட்டுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.