Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை கொன்ற தாய்!



கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய பதினைந்து வயது மகனை அவனின் தாயே கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜெ.ஜெ காலணியை சேர்ந்தவர் வரிதா(40). அவர் தன்னுடைய கணவனை விவாகரத்து செய்துவிட்டு அவரின் தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வருகிறார். வரிதாவுக்கு நிக்கோலஸ்(15) என்ற மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் வரிதா திடீரென காணமல் போனார். அதன் பின் ஒரு மாதம் கழித்து நிக்கோலஸ் தன்னுடைய தாத்தைவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளான். அதில் அவர்கள் புனேவில் இருப்பதாகவும், தனது தாய் வரிதா வேறொரு ஆணுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளான். மேலும், தனக்கு தன்னுடைய தாயின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றும் தன்னை டெல்லிக்கே அழைத்து சென்றுவிடும்படி தாத்தாவிடம் கூறியுள்ளான்.


 
நிக்கோலஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே, செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின் அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனிடையில், கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வரிதா தன்னுடைய தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் யூனிஸ்கான் என்பவர் இருந்துள்ளார். அவரின் தந்தை ஜோசப் ஜான், நிக்கோலஸை பற்றி விசாரித்த போது, அவன் தற்கொலை செய்து கொண்டதாக வரிதா கூறியுள்ளார். தன் மகளும், அவரின் காதலனும் சேர்ந்து தன் பேரனை ஏதோ செய்து விட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட ஜோசப் ஜான் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தெரிந்து கொண்ட வரிதா, தன்னுடைய காதலனுடன் தலைமறைவானார். போலிசார் விசாரணையில் இறங்கினார்கள். நிக்கோலஸ் கடைசியாக தனது தாத்தாவிடம் செல்போனில், புனேவில் எந்த இடத்திலிருந்து பேசினான் என்பதை செல்போன் அலைவரிசை மூலம் கண்டுபிடித்தனர். உடனே போலிசார் புனேவில் நிக்கோலஸ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் வீடு பூட்டியிருந்தது. வீட்டு உரிமையாளரிடம் விசாரித்த போது வரிதாவும் யூனிஸ்கானும் கணவன் மனைவி என்று கூறி வீடு வாடகைக்கு எடுத்ததாகவும், அதன்பின் டெல்லிக்கு ஒரு வேலையாக போகிறோம் என்று கூறிச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது விட்டின் படுக்கையறையில், தரையில் புதிதாக மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு சந்தேகம் அடைத்த போலிசார் அந்த கற்களை தோண்டி பார்த்தனர். அங்கு நிக்கோலஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளான். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவரின் தாய் வரிதாவும் அவரின் கள்ளக்காதலன் யூனிஸ்கானும் சேர்ந்து நிக்கோலஸ் கொலை செய்து, வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலிசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.