Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

பொது கிணற்றில் இருந்து நீர் எடுத்ததற்காக தலித் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு



உத்திர பிரதேசத்தில் சவ்ரி பகுதியில் உள்ள அம்வா கிராமத்தில் 25 வயதான பங்கஜ் தைகர் என்கிற தலித் சமூகத்தை சார்ந்த இளைஞர் பொது கிணற்றில் இருந்து நீர் எடுத்துள்ளார். இதனை சகித்துக் கொல்ல முடியாத உயர் ஜாதியினர் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது அப்பகுதியில் இரு குழுக்களிடையே மோதலாக வெடித்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அப்பகுதி காவலர் வினோத் யாதவ் கூறுகையில், தலித் சமூகத்தை சேர்ந்த பங்கஜ் தைகர் ஒரு அரசு குடிநீர் கிணற்றில் இருந்து நீர் எடுத்துள்ளார். அதனை கைலாஷ் பதக் என்ற உயர் ஜாதியை சேர்ந்தவர் தடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் இரு குழுக்களிடையேயான மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலில் கைலாஷ் பதக், தைகரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த தைகர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அவரது நிலை சீராகி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிகழ்வு குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.