தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரின் மர்ம உறுப்பை தலித் சிறுமி ஒருவர் கத்தியால் அறுத்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் இஞ்சோலி பகுதியில், காட்டுப்பகுதிக்கு சென்ற 17 வயது தலித் சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை வழிமறித்த ரயீஸ் (23) என்ற இளைஞர், கத்தி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், இளைஞரின் கையில் இருந்த கத்தியை லாவகமாக பிடுங்கிய சிறுமி, இளைஞரின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இளைஞரின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கால் என்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.