June 22, 2016
திருவனந்தபுரத்தில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சை
அமைச்சர் சைலஜா
திருவனந்தபுரத்தில் சர்வதேச யோகா தினத்துக்கான நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கலந்து கொண் டார். அப்போது யோகாவுடன் சமஸ் கிருத பிரார்த்தனை பாடலும் இடம் பெற்றது. பின்னர் உரையாற்றிய சைலஜா, ‘‘யோகா ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்தமில்லை. எனவே பிரார்த்தனை பாடல்கள் அவசியமற்றது’’ என்றார். அத்துடன் சமஸ்கிருத பாடல்களை சேர்த்தது ஏன் என்றும் ஆயுஷ் துறை அதி காரிகளிடம் கேள்வி எழுப்பினார். அனைத்து மதத்தினரும் ஏற்கும் வகையிலான பிரார்த்தனை பாடல் களை வேண்டுமென்றால் நிகழ்ச்சி யில் சேர்க்கலாம் என்றும் அவர் களுக்கு அறிவுரை வழங்கினார்.
மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி சமஸ்கிருத பிரார்த்தனை பாடல் சேர்க்கப்பட்ட தாகவும், அந்த பாடல் பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர்
திருவனந்தபுரத்தில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.