Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2016

தங்கையின் மரணத்தில் உடன்கட்டை ஏற துணிந்த அண்ணன்


விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்தைச்சேர்ந்த குமார் தனது தங்கையின் இறுதிச்சடங்கில் உடன் கட்டை ஏற துணிந்து தீயில் குதித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விழுப்புரத்தைசேர்ந்த தொழிலாளி குமாருக்கு (26) திருமணமாகி அஞ்சலாட்சி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. இவரது தங்கையான குமாரியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நல்லூர் பாளையத்தைசேர்ந்த சக்திவேலுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது.

குமாரி தனது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். தங்கையின் மீது அதிக பாசம் கொண்டிருந்த குமார் அவரது பிரிவை தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். தங்கையின் இறுதிச்சடங்கு நல்லூர் பாளையத்தில் வைத்து நடைபெற்றது. அதில் பங்கேற்ற குமார் தொடர்ந்து துக்கம் தாளாமல் அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் அவரை எவ்வளவோ தேற்ற முயன்றும் பலனில்லாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

குமாரியின் இறுதிச்சடங்கை நிறைவுற்று உடல் தகனம் செய்யப்படுவதற்காக எரியூட்டினர். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில்  தீடீரென குமார் தீயில் குதித்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.