Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

குடிபோதையில் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞன்..!




வேலூர் அருகே ஒருவர் குடிபோதையில் தனது தாயின் கழுத்தை அறுத்து 
 கொலை செய்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திமிரி அருகே இருக்கும் தாமரைப்பாக்கத்தை சேர்தவர் ரமேஷ். குடிப்பழக்கம் உள்ளவர். அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இப்படி தினமும் குடித்துவிட்டு வரும் நபருடன் இனியும் வாழ முடியாது என்று அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பாழாய் போன குடியால் மனைவியை பிரிந்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை..
மனைவி சென்றால் என்னவென்று குடித்துவிட்டு வந்து தனது தாய் பூங்காவனத்துடன் தகராறு செய்து வந்துள்ளார். அப்படி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளை எடுத்து பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் பூங்காவனத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ரமேஷ் தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் அவரை வளைத்துப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.