Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

உவைசியை கொல்ல ஹிந்துத்துவ தீவிரவாதிகள் சதி திட்டம்


அகில இந்திய மஜ்லீசே இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் உவைசியை படுகொலை செய்யும் சதி திட்டத்துடன் உபி மாநில நவ நிர்மான சேனா தலைவன் அமித் ஜானி செயல்பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளன.
அமித்ஜானி அண்மையில் அனுப்பிய வாட்ச்ப் செய்தியில் கூறிய பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாங்கள் உவைசியை சுட்டுகொல்லும் நோக்கத்துடன் இரண்டு 9. எம் எம் பிஸ்டல் துப்பாக்கிகள் வாங்கினோம் என்றும் மேலும் 32 துப்பாக்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகள் வாங்கினோம் என்றும் வாட்சப்பில் உண்மையை உளறியுள்ளார்.
இத்தகவலை தி வைர் வலைத்தளம் உறுதி படுத்தியுள்ளது.
உவைசி முசாபர் நகரில் நடந்த இடை தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு தேர்தல் பரப்புரை செய்ய நிச்சயம் வருவார் என நம்பினோம் அப்போது சுட்டுக்கொலை செய்ய திட்டம் தீட்டினோம் கடைசி நேரத்தில் உவைசி கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து வாபஸ் ஆகிவிட்டதால் அப்போதைக்கு அம்முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உவைசியின் வீடு மற்றும் அலுலகங்களில் உளவு பார்த்து வந்தோம் என்ற அமித் ஜானி இடையில் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கன்னையா குமாரின் முழக்கங்கள் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த பிரச்னையில் அவரை அச்சுறுத்த விரும்பினோம். என்று சொன்ன அமித் ஜானியின் தம்பி சவுரப் என்பவன் தான் கண்ணைய குமாரின் உமரின் தலையை எடுக்கவேண்டும் என பகிரங்கமாக கடிதம் எழுதியவன் .
இந்நிலையில் பயங்கரவாதி அமித் ஜானி தலைமறைவாகி விட்டதாகவும் தீவிர தேடுதல் (?) வேட்டையில் டெல்லி போலீஸ் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மட்டுமல்ல மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கு பெற்று வரும் சிறுபான்மை சமூகத்தின் ஆளுமைக்கு உயிருக்கு அச்சுறுத்தல் என்பது யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாதது. அதற்கான பொறுப்பினை அந்த வெறி அமைப்புகள் மட்டுமின்றி மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளவேண்டும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.