June 19, 2016
வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க வருவார்கள்...?
1500 ஆண்டுகளுக்கு பிறகு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆரயாச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் என்று யாராவது இருக்கிறார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் பிரம்மிப்பூட்டும் வகையில் இது தொடர்பாக பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தி இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆங்கில திரைப்படத்தில் வேற்றுகிரகவாசிகள் பூமியை தாக்குவது போலவும், அவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிப்பதுபோலவும் படக்காட்சிகள் அமைந்திருக்கும்.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியாளர் இவான் சாலமனைட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது வேற்று கிரக வாசிகளின் குரல்களை நாம் யாரும் இதுவரை கேட்டதில்லை அதற்காக அப்படிப்பட்டவர்கள் யாரும் இல்லை என முற்றிலுமாக நிராகரித்துவிடமுடியாது. அக்குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். 1500 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம். தற்போது டிவி மற்றும் ரேடியா ஒளிபரப்பு சிக்னல்கள் விண்வெளிக்குச்சென்றும் 80 ஆண்டு ஒளி வேகத்தில் பூமிக்கு அது திரும்புகிறது. இதன் மூலமாகக்கூட வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு சிகனல்களை அனுப்பலாம், ஆனால் அதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சிக்னல்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஆராய்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க வருவார்கள்...?
Reviewed by மறத்தமிழன்
on
June 19, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.