மதிய நேரத்தில் சாப்பிட வீட்டுக்கு செல்லும் மாணவிகளையும், சாப்பாடு முடித்துவிட்டு பள்ளிக்கு மீண்டும் செல்லும் மாணவிகளையும் குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கால்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த ஆட்டோ டிரைவர், பள்ளி மாணவிகளிடம், எனது சகோதரிக்கு ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும் வர முடியுமா என்று உதவி கேட்பார், அவரை நம்பி வரும் மாணவிகளை பலவந்தமாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
முதலில் இந்த விவகாரத்தை பயம் காரணமாக வெளியில் சொல்லாமல் மாணவிகள் விட்டுவிட்டனர். ஆனால் அதன்பின்னர் குழந்தைகளுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்து வரும் தொண்டு நிறுவனமான பலாலா கக்குல சங்கத்தின் உதவியை நாட்டினார். அவர்கள் போலீசிடம் இந்த பாலியல் கொடுமைகள் குறித்து கூறியதுடன், ஆட்டோ டிரைவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
ஆட்டோ டிரைவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறுகையில் ‘சில மாதங்களுக்கு முன்பு என்னை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ டிரைவர், தனது சகோரிக்கு சிறிய உதவி செய்ய வேண்டும் என்னுடன் வரமுடியுமா என்று கேட்டு அழைத்து சென்றார். அப்போது நம்பி சென்ற என்னை பலவந்தமாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் . என்னுடைய பெற்றோரிடம் இந்த விஷயத்தை சொல்ல எனக்கு பயமாக இருந்தது. இந்நிலையில் என்னை கொன்றுவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்’ இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பாக புகாரை பதிவு செய்த போலீஸார் , குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.