June 15, 2016
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில் இந்துத்துவா இயக்க நிர்வாகி கைது
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை படுகொலை செய்த வழக்கில் ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த வீரேந்திரசிங் தாவ்டே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். புனேயை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
இதில் நரேந்திர தபோல்கர் உயிரிழந்தனர். மூட நம்பிக்கையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நரேந்திர தபேல்கர் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய வீரேந்திரசிங் தாவ்டே என்ற நபரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவா இயக்கத்தை சேர்ந்தவர் தாவ்டே என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks To: one india tamil
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில் இந்துத்துவா இயக்க நிர்வாகி கைது
Reviewed by மறத்தமிழன்
on
June 15, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.