Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

அடிமை விதைப்புகள்....!!


அமெரிக்கா உலக ஏகாதிபத்திய சக்தியாக உருவாவதற்கு முன்பே தங்கள் தேச கலாச்சாரங்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தது. டெனிம் அல்லது புளூ ஜீன்ஸ் டிசைன்பண்ணப்பட்டு அது ஒட்டுமொத்த அமொிக்கர்களையும் கொள்ளை கொண்ட போது அவர்கள் அதனை உலகமும் விரும்பி ஏற்கும் என கணக்குப் போட்டனர்.
ஆனால் பிரத்தியேகமாக ஏதாவது ஒரு அமெரிக்க அடையாளம் தவிர்க்க முடியாமல் அதில் எப்போதும் இருப்பது தங்கள் கலாச்சார அடையாளமாக உலகை வலம் வரும் என்று எண்ணினர். அதனால் டெனிமின் பொக்கட் பகுதிகளில் எந்த தேவையும் இல்லாமல் தைக்கப்பட்ட நிலையிலேயே அதன் முனைகளில் ஆணியின் தலை போன்ற ரிவேர்ட்டை அடித்தனர்.
சோவியத் அதிபர் குருச்சேவும், கியூப அதிபர் கஸ்ரோவும், வட கொரிய அதிபர் கிம் இல் சுங்கும் அதனை தங்கள் ஆட்சிக்காலத்தில் தடை செய்திருந்தனர். தேசத்தில் டெனிம் அணியலாம். ஆனால் அதில் பித்தளை தலையுடைய ரிவேர்ட்கள் இருந்தால் தண்டனை என்று. அவர்களின் மறைவின் பின்னர் அங்கும் அமெரிக்க மேலாண்மை கலாச்சாரம் வெற்றிகண்டது.
அவர்களின் அன்றைய உலகமேலாதிக்க சிந்தனை இந்த நிமிடம் வரை உயிர்ப்புடன் இருக்கிறது. அமெரிக்க தேசிய கொடியை எரிக்கும் வட ஆபிரிக்காவின், அல்லது மத்தியகிழக்கின் ஏன் எம் தேசத்து இளைஞர்கள் கூட அந்த அமெரிக்க எச்சங்களை சுமந்த நிலையில் தான் அதனை செய்கிறார்கள். ..........

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.