Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஹிலாரி கிளிண்டன்


அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. 

இந்த தேர்தலின் முடிவில் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

227 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர், பிரதான கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அவர் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிட தக்கது. 

ஹிலாரி கிளிண்டனின் நியமனத்தை அவரது  ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.