13 வயது சிறுமி ஒருவரை கோவாவில் இருந்து அஹமதாபாத் செல்லும் வழியில் விமானத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்கிழமை காலை கைது செய்யப்பட்ட இவர் மீது Protection of Children from Sexual Offences (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
41 வயதுடையவரான அசோக் மக்வானா குஜராத்தின் காந்திநகர் பகுதி பா.ஜ.க வின் துணை தலைவர் ஆவார்.
விமான பயணத்தின் போது தனக்கு அடுத்து அமர்ந்திருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் அசோக் மகவானா. இதனை அடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.
விமான பயணத்தின் போது தனக்கு அடுத்து அமர்ந்திருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் அசோக் மகவானா. இதனை அடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில், அந்த சிறுமிக்கு அடுத்த இருக்கை அசோக் மக்வானாவின் நண்பரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இருவரும் விமானத்தில் வைத்து இருக்கையை மாற்றியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. அதனால் இது அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கைகள் மாற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காவல்துறையினர் மக்வானாவை ஐந்து நாள் காவலில் வைக்க அனுமதி கோரியுள்ளனர். முன்னதாக சர்தார்நகர் காவல்துறையினர் இவரை காந்திநகரில் வைத்து அவரை கைது செய்திருந்தனர். இவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354-A மற்றும் POSCO வின் பிரிவு 11 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்வானா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்த அவரது வழக்கறிஞர், மக்வானா விமானத்தில் ஏறியதும் அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அவர் தனது பயணம் முழுவதும் உறங்கிக் கொண்டு இருந்தார் என்றும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.