Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொன்ற மகள்



காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்த மகளை, காதலனுடன் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55), விவசாயி. இவருக்கு பிரமிளா (42) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2-வது மகள் மகாலட்சுமி (19) ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நெகமம் அருகே தேவணாம்பாளையத்தில் உள்ள தோட்டத்துக்கு நாகராஜ் கடந்த மாதம் 23-ந்தேதி சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய மகள் மகாலட்சுமி, தனது காதலன் சதீசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் சதீசின் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மகாலட்சுமி, தனது காதலன் சதீசுடன் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரையும் போலீசார் பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மகாலட்சுமி கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மகாலட்சுமி, சதீஷ் ஆகியோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். இதற்கு மாஜிஸ்திரேட்டு ஹரிகரன் அனுமதி வழங்கினார். நாளை (வெள்ளிக்கிழமை) அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

2 பேருக்கும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி, சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நாகராஜ் கொலையில் அவருடைய மனைவி பிரமிளாவுக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைக்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் போலீசார் தேடிவந்தனர்.

பிரமிளா கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதால் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.