Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2017

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை உள்ள காணாமல் போனவைகள்



இந்த நவீன யுகத்தில் பல பழக்க வழக்கங்கள்,பொருட்கள் மறைந்து காண்பதற்கு அரிதாகி விட்டது. பெரியம்மா,பெரியப்பா,சித்தி,சித்தப்பா,மாமா,மாமி,என்ற முறைகள் எல்லாம் மறைந்து பொதுவில் ஆண்ட்டி,அங்கிள் என்று தங்களின் பாசத்தினைப்போன்று உறவு முறைகளையும் சுருக்கிக்கொள்கின்றனர்.

சகோதரி மாதேவி(சின்னு ரேஸ்ரி ) அரிதாகிப்போன பொருட்கள் ,சாதனங்கள் என்று அந்தக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்களை அழகாக படம் எடுத்து போட்டு கருத்தை கவர்ந்து இருந்தார்.நான் சிறிய வயதில் கண்டு,அனுபவித்து களித்த பொருட்களை இப்பொழுது காண்பது அரிதாகிவிட்டது.அப்படி அரிதாகிப்போன பொருட்கள்,ஜீவன்களை கூகுளில் தேடிப்பிடித்து உங்கள் முன் படைக்கிறேன்.
வெற்றிலை தட்டு

அந்தகாலத்தில் உறவினர்,நண்பர்கள் இல்லங்களுக்கு சென்றால் உபச்சாரங்களுக்கு பிறகு இறுதியில் வரும் தட்டு.பாக்கு,வெற்றிலை,சுண்ணாம்பு,இதர வாசனைபொருட்கள் நிரப்பி வைத்திருக்கும் தாம்பூலத்தட்டு.கூடச்செல்லும் சிறார்களுக்கு அதிலேயே கண்ணாக இருக்கும்.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எடுத்து வாயில் அதக்கிகொள்ளும் சிறியவர்களில் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது?தட்டு வடிவில் மட்டுமில்லாமல் அன்னம்,மயில் சேவல் பூ வடிவங்களில் கூட இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.